விருதுநகர் பிப், 1
தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்த நிலையில் விருதுநகரில் இன்று காலை முதல் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. அதே போல் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் தென்காசி, விருதுநகர், மதுரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.