சென்னை ஜன, 30
மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் நலத்திட்டங்கள் தடையின்றி சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.