இங்கிலாந்து ஜன, 30
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை அணியில் எடுக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ளே கருத்து தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு காரணம் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களிடம் வேரியேஷன் இல்லை என்றும் அது குல்தீப் யாதவிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இரண்டாவது டெஸ்டில் குல்தீப் அணிக்கு பெரிய பலமாக இருப்பார் என்று அவர் யோசனை தெரிவித்தார்.