புதுடெல்லி ஜன, 28
இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசவிருக்கிறார் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றுகிறார். மோடி அந்த வகையில் இன்று பகல் 11 மணிக்கு பிரதமர் உரையாற்ற இருக்கிறார். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அது குறித்தும், வரவிருக்கும் தேர்தல் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.