சென்னை ஜன, 22
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை ஒட்டி தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம் அதன் பின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. அவை யாவும் முடிக்கப்பட்டு காலை 11 மணிக்கு இறுதிப்பட்டியலை சத்யபிரதா சாஹு வெளியிட இருக்கிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் பட்டியல் வெளியிடப்படும்.