சென்னை ஜன, 19
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் உத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால், நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அண்ணா தொழிற்சங்கமும், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக சிஐடியுவும் அறிவித்துள்ளன.