சென்னை ஜன, 15
மத்திய அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரு வேறு பேரிடர்களில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நிதியை வழங்க வலியுறுத்தி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மத்திய குழுக்களும் பார்வையிட்டு சென்று உள்ள நிலையில் நமது கருத்துக்களை உள்வாங்கி இருப்பார்கள் என நம்பிக்கை கொள்வோம் என தெரிவித்துள்ளார்.