சென்னை ஜன, 13
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை ஜனவரி 17ம் தேதி செயல்படாது என்று வியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். பொங்கல் விற்பனைக்காக இன்னும் மூன்று நாட்கள் கோயம்பேடு சந்தை பரபரப்பாக இயங்கும். அதன் பின் ஓய்வுக்காக ஒரு நாள் விடுமுறையை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் சில்லறை விற்பனையாளர்களும், நுகர்வோரும் கோயம்பேடு சந்தைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.