சென்னை ஜன, 9
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தவறாத கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.