செங்கல்பட்டு ஜன, 8
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.