சென்னை ஜன, 7
வெள்ள நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த கூடிய வழக்கில், நிவாரணத் தொகை கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வங்கி மூலம் நிவாரணத் தொகை ரூ.6000 டெபாசிட் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு வங்கி கணக்கில் 6000 ரூபாய் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.