சென்னை ஜன, 7
பொங்கல் பரிசு டோக்கன்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் தயாராக உள்ள நிலையில், அதனை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக விநியோகிக்க உள்ளனர். ஒரே நேரத்தில் அனைவருக்கும் டோக்கன் பொங்கல் பரிசு கொடுத்து முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.