புதுடெல்லி ஜன, 1
புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,929 இல் இருந்து 4.5 0பைசா குறைந்து 1924.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 918.50 ல் நீடிக்கிறது.