சென்னை டிச, 31
விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்திய அவர் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் விஜயகாந்த் சிலை வைப்பதற்கு தமிழக அரசிடம் கடிதம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.