ராஜஸ்தான் டிச, 31
ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 115 தொகுதிகள் வென்று பாஜக ஆட்சியைப் பிடித்தது கடந்த 15ம் தேதி முதல்வராக பஜன்லால் சர்மா, துணை முதல்வர்களாக தியாகுமாரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிலையில் நேற்று 22 அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா ராஜ்பவனில் நடைபெற்றது. இவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.