புதுடெல்லி டிச, 30
தேர்தல் ஆணையர்களின் நியமன சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி மர்மு ஒப்புதல் அளித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை இதுவரை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் தேர்ந்தெடுத்து வந்தனர். இதில் நீதிபதியை மட்டும் விடுவிக்க கொண்டுவரப்பட்ட புதிய மசோதாவுக்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இனி மூன்றாவது நபராக மத்திய அமைச்சர் ஒருவர் செயல்படுவார்.