பாகிஸ்தான் டிச, 27
தமிழகத்தை போல பாகிஸ்தானிலும் முட்டை விலை அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் பொருளாதாரம் நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக 30 டஜன் முட்டையின் விலை ரூ.10,500 இல் இருந்து 12,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு முட்டை ரூ. 32.40 காசுக்கு விற்பனை ஆகிறது. கோழிப் பண்ணைக்கு பயன்படுத்தப்படும் சோயாபீன்ஸ் வரத்து குறைவு விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.