விருதுநகர் டிச, 24
சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ரூபாய் 10 கோடிக்கான காலண்டர் ஆர்டர் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் 2024ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி, கடந்த அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட வியாபாரிகள் தங்கள் கொடுத்த ஆர்டர்களை வாங்க ஆர்வம் காட்டாததால், பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் உற்பத்தியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.