கீழக்கரை டிச, 26
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்துக்கு சொந்தமான மக்தூமியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செ.மு.முகம்மது சுல்தான் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கண்,காது,எலும்பு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்பட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் கலந்து கொண்ட குலசேகரபட்டினம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையோடு மக்தூமியா பள்ளி முன்னாள் மாணவர்களும் இணைந்து மருத்துவ முகாமினை நடத்தினர்.
மேலும் செ.மு.முகம்மது சுல்தான் அறக்கட்டளை நிறுவனர் செ.மு.இஸ்மாயில்,செ.மு.ஹஸன்,ஹாஜா முகைதீன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். இம்முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி.
மாவட்ட நிருபர்.