சென்னை டிச, 22
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10மணி வரை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.