சென்னை டிச, 14
தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கு பழங்குடியினரின் இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறோம் என்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் யாழ் இசையை ரீகிரியேட் பண்ணியது போல் தங்கலான் படத்திலும் பழங்குடி இசையை ரீகிரியேட் பண்ணி இருக்கிறேன். எனக்கு ரொம்ப சவாலாக இருந்த இந்த படம் என் சினிமா பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்றார்.