டேராடூன் டிச, 8
2023 ஆம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் தொடங்குகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களும், தொழில்துறை பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர். இதனால் இந்தியாவுக்கு அதிகப்படியான முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.