வேலூர் ஆகஸ்ட், 22
கொரோனா தடுப்பூசி முகாம் வேலூர் மாவட்டத்தில் 34வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது. சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு மற்றும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், காட்பாடியில் மருத்துவமனை அமைச்சர் துரைமுருகன் தொகுதியான காட்பாடியில் ரூ.30 கோடியில் அரசு மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கு அடிக்கல் நாட்டப்படும்.
மேலும் பென்ட்லேண்டு மருத்துவமனையும் தரம் உயர்த்தும் பணி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, சட்ட மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, 2வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், நகர்நல அலுவலர் முருகன், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்