சென்னை டிச, 7
சென்னையில் வெள்ளம் அடையாமல் உள்ள பகுதிகளில், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு இரண்டு நாட்களாக இந்திய விமான படையின் நான்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதில் தண்ணீர் பாட்டில், பால் பவுடர், பிஸ்கட், நூடுல்ஸ், கோதுமை மாவு வழங்கப்பட்டுள்ளது. இதனை புகைப்படமாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பொதுமக்கள் உணவின்றி தவித்தவர்களுக்கு இது பேருதவியாக இருப்பதாக நெகிழ்ந்துள்ளனர்.