சென்னை டிச, 7
கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு பால் விற்றால் முகவர் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளர்களுக்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கும் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ள சந்தையில் விற்கவோ அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.