கர்நாடகா டிச, 7
தெலுங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. அவருக்கு மதியம் ஒரு மணிக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதன் மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. மேலும் இந்த விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.