அயோத்தி டிச, 6
அயோத்தியில் ஆயிரம் கோடி செலவில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 2024 ஜனவரி 22ம் தேதி கோவில் கருவறையில் கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க எட்டாயிரம் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோருக்கு ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.