ஈரோடு டிச, 3
ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை 15 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவில் இல்லாததால் அனைத்து நீர் வரத்து குறைந்துள்ளது மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது.