புதுடெல்லி டிச, 1
தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவை மத்தியில் ஆளும் பாஜக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாற்றி இருப்பது பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. இந்தியாவின் தேசிய சின்னத்திற்கு பதிலாக இந்து கடவுளான தன்வந்திரியின் உருவமும் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்றும் மாற்றப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி வருகிறது.