ராணிப்பேட்டை டிச, 1
ராணிப்பேட்டை அருகே உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்பட்டது. சிறுவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி சிறுவனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அதிலிருந்து கட்சி நிர்வாகிகள் அவரை அங்கிருந்து சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.