திருவள்ளூர் ஆகஸ்ட், 22
சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இங்கு கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு பணிகள் நடந்தன. தொடர்ந்து கடந்த 17 ம்தேதி கோவில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன், கோ பூஜை, நவக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் யாகசாலை பூஜை நிறைவடைந்தது. இவ்விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுதவிர, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளித்தனர்.