சென்னை நவ, 26
தனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வரும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.