அகமதாபாத் நவ, 20
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் செயல்பாடு இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக பேட்டிங்கில் அசத்தும் இந்திய அணி இந்த தொடரில் பவுலிங்கில் மிரட்டி எதிரணிக்கு அச்சமூட்டியது. அந்த வகையில் இந்த 2023 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.