தேனி நவ, 16
தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வருசநாடு வாளிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக வருசநாடு, முருக்கோடை, உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது பெரிய அளவிலான விபத்துக்கள் நடைபெறும் முன்பு வருசநாடு வாலிபர் இடையே தார் சாலை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.