சென்னை நவ, 15
தமிழகத்தில் நேற்று முழுவதும் அடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழைவிட்ட சிறிது நேரத்தில் சாலையில் இருந்த தண்ணீர் பெரும்பாலான இடங்களில் வடிந்து சென்று விட்டது அதற்கு அரசும், துப்புரவு பணியாளர்களும் மற்றும் மழைநீர் வடிகால் திட்டமும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிக அளவில் தண்ணீர் தேங்காததால் பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.