உடுப்பி நவ, 11
தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் என்பவர் நண்பர்களுடன் கர்நாடக பகுதியில் உள்ள அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கால் தவறி கடலில் விழுந்த முருகனை நண்பர்கள் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடுப்பியை சேர்ந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த முருகனை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் முருகனை அனுமதித்து அவரை காப்பாற்றினர்.