சென்னை நவ, 4
FEFSI யூனியனில் தகுதியுள்ள திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அதன் தலைவர் செல்வமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெப்சி யூனியனில் இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட சினிமா சார்ந்த 24 தொழில் முறை பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு அந்தந்த சினிமா சார்ந்த தொழில் முறை பிரிவுகளுக்கு ஏற்ப உறுப்பினர் அட்டையும் வழங்கப்படும் என்றார்.