மதுரை ஆகஸ்ட், 21
கார்த்தி, அதிதி நடித்த விருமன் திரைப்பட வெற்றியை அடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலுக்கு வந்த விருமன் திரைப்பட நடிகர்கள் கார்த்தி, சூரி மற்றும் இயக்குனர் முத்தையா, 2 டி நிறுவனத்தை சேர்ந்த பாலா உள்ளிட்டோர் ஒச்சாண்டம்மன் மற்றும் விருமன் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான ரசிகர்கள் கார்த்தி, சூரியுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.