கன்னியாகுமரி ஆகஸ்ட், 21
சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
இதேபோல் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜெபமணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கவிதா வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கவிதா, அனுசியா, பிரபாராணி, லூயிஸ் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பொன்பாக்கிய தீபா கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் உதயகுமார், நாஞ்சில் நதி, ரிச்சர்ட் ஹென்றி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.