திருவனந்தபுரம் அக், 31
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்குவதில் கேரள அரசு மெத்தனம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே. பி நட்டா குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் நடந்த போராட்டத்தில் பேசிய அவர், ஒரு காலத்தில் கேரள மிகவும் அமைதியான மாநிலமாக இருந்தது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மட்டுமின்றி சட்டம் ஒழுங்கை பேணுவது பொது அமைதியை நிலைநாட்டுவது என அனைத்திலும் கேரள சிபிஎம் அரசு தோல்வி அடைந்து விட்டது என்றார்.