புதுச்சேரி அக், 26
ராகுல் காந்தி பிரதமராகும்போது இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன் மீது பிரதமர் மோடி அரசு கவலையில்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், படகுகள் பறிமுதல் போன்ற பிரச்சனைகள் எதுவும் நடக்கவில்லை என்றார்.