சேலம் அக், 26
தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் நவம்பர் 1ம் தேதி குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது.