புதுடெல்லி அக், 26
ரூ.2000க்கு பதில் ரூ.1000 நோட்டுகள் மீண்டும் வர இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பால் ரொக்க பணம் தேவை குறைகிறது. இதனால் மீண்டும் ரூபாய் ஆயிரம் நோட்டு புழக்கத்தில் வர வாய்ப்பு இல்லை. இது போன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனக் கூறிய ஆர்பிஐ, 2000 நோட்டுகள் திரும்பப்பெறும் அவகாசம் அக்டோபர் 7ம் தேதியுடன் முடிந்தது என கூறியுள்ளது.