புதுடெல்லி அக், 20
பங்காரு அடிகளாரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். தனது twitter பக்கத்தில், “ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மூலம் பலருடைய வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்துள்ளார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.