சென்னை அக், 18
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் 9:00 மணி காட்சிக்கு டிக்கெட்டுகளை புக் செய்து படத்தை திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். விஜய் படம் என்றாலே பஞ்சாயத்து தான் அதிலும் இம்முறை நிறைய பஞ்சாயத்துக்கு மத்தியில் வெளியாவதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.