சென்னை அக், 17
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 1.7 லட்சம் டிக்கெட் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் PVR, INOX திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது.