நெல்லை ஆகஸ்ட், 20
நெல்லை மாவட்டம் சிவராம் கலை கூட மாணவி ஸ்ரீநிதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மஞ்சள் குங்குமம் கொண்டு 108 விநாயகரை ஓவியமாக வரைந்து உள்ளார்.
சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி இன்று வரை 108 ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளார். இந்த ஓவியங்கள் அனைத்தும் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியக காப்பாளர் சிவசக்தி வள்ளி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை ஓவிய ஆசிரியர் கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீநிதி சிவராம் கலைக்கூடத்தில் நடத்தப்பட்ட அனைத்து விழிப்புணர்வு ஓவியங்களிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியவர் அக்கரலிக் கலர் ஓவியம் கலர் வாட்டர் கலர் ஓவியம்பென்சில் ஓவியம் ஆயில் பெயிண்டிங் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சக மாணவிகளோடு சேர்ந்து வரைந்த பாரதியின் ஓவியம் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் பதிவானது. மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகுமார் வித்யா லட்சுமி நன்றி கூறினர்.