சென்னை அக், 5
அரசு அறிவிக்கும் திட்டங்கள் அதிகாரிகளின் குழந்தைகளை போன்றது என ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதிகாரிகள் நினைத்தால் திட்டங்கள் முழுமை பெறும் எனவும், காலக்கெடுவை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் வலியுறுத்திய முதல்வர் மாவட்டங்களில் வளர்ச்சி அடைய செய்யும் அதிகாரிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.