பஞ்சாப் அக், 1
பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று பல இடங்களில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 180க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இழப்பீடு, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.