சென்னை செப், 30
மார்க் ஆண்டனி படம் வெளியிடுவதற்கு சிபிஎஃப்சி அதிகாரிகள் ரூ. 6.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் புகார் கிளப்பியிருந்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது. லஞ்சம் வாங்குவது உண்மைதான் என்று முன்னாள் நகர்மன்ற தலைவர் நிஹலானியும் ஆமோதித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று சிபிஎஸ்சி உறுப்பினர் பிரசூன் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.